\
இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசிச்சென்ற மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசிச்சென்ற மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசிச்சென்ற மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை
Published on

படப்பை அருகே கொலை செய்து இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலின் முன்பு வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

படப்பை அடுத்த சோமமங்கலம் எருமையூர் அருகே நேற்று இரவு அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலின் முன்பு இளைஞர் ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கபட்ட நிலையில் இருந்ததை கண்ட் அக்கம்பக்கத்தினர் சோமமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டிக்கபட்ட தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து முதற்கட்ட விசாரனையில் அதே பகுதியில் உள்ள கிறிஸ்துராஜா கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரியவந்தது. இவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தலையில்லா உடலை மர்ம நபர்கள் எங்கு வீசி சென்றனர் என்று போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஏராளமான போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com