சென்னைக்கு 70 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி
புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாண்டோஸ் புயலின் மையப்பகுதி. புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருவதால் காற்றின் வேகம் கடுமையாக உள்ளது. புயல் கரையை கடந்து வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புயலை வெளிப்புடன் கண்காணிக்கும் அரசு
மாண்டஸ் புயல் குறித்து அரசு விழிப்புடன் கண்காணித்து வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக எழும்பூரில் இருந்து ரயில்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பலத்த காற்றில் வேரோடு சாய்ந்த மரம் அகற்றப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அகற்றினர்.