விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, தேமுதிக களத்தில் இல்லை... வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தற்போதைய தமிழக அரசியலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. அதிமுக போட்டியிடாத சூழலில் அத்தொகுதி மக்களின் வாக்கு யாருக்கு? என்பதை விரிவாக பார்க்கலாம்...
இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்புதிய தலைமுறை

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமான நிலையில், அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனால் திமுக, அதிமுக என்ற போட்டி மாறி, திமுக - பாமக என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளும் திமுகவுக்குதான் விழும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்pt desk

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிடுவதால் தங்கள் தரப்பு வெற்றியை பெறும் என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி தெவித்துள்ளார். இப்படியான சூழலில் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே வாக்களிப்போம் என்று கூறுகின்றனர் விக்கிரவாண்டி வாசிகள்.

இடைத்தேர்தல்
நாளை கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் முக்கிய பிரச்னைகள் இவைதான்!

பனைக்கென தனி அமைச்சகம் வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக அப்பகுதி பனைத் தொழிலாளர்கள் வைக்கின்றனர். போலவே குறிப்பாக நீர் ஆதாரத்தை பெருக்க நந்தான் கால்வாய் திட்டத்தினை முழுமையாக முடிக்க வேண்டும், சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்டவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

அதேபோல், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், உழவர் சந்தை, மலர் அங்காடி ஆகியவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வைக்கின்றனர்.

விக்கிரவாண்டி பாமக வேட்பாளர்
விக்கிரவாண்டி பாமக வேட்பாளர்jpt desk

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் அவர் அதிமுக வேட்பாளரை விட 6 ஆயிரம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார்.

இடைத்தேர்தல்
ஆந்திரா| அன்று வீடு..இன்று அலுவலகம்; ஜெகன் கட்டடம் இடிப்பு..பழிக்குப்பழி வாங்கும் சந்திரபாபு நாயுடு!

அதேநேரத்தில் பாமக திமுகவை விட 40 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தது. எனவே, அதிமுகவின் வாக்கு யாருக்கு செல்லும், எப்போதும் போல, இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறுமா என்பதெல்லாம் தேர்தல் முடிவு வெளியாகும் ஜூலை 13 ஆம் தேதி தெரியவரும். தற்போதைக்கு அத்தொகுதியில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com