”வாரிசு என்றாலே பிரச்னைதான்..அது படமாக இருந்தாலும்; திமுக பாஜகவோடு போக வாய்ப்பு” - சீமான்

”வாரிசு என்றாலே பிரச்னைதான்..அது படமாக இருந்தாலும்; திமுக பாஜகவோடு போக வாய்ப்பு” - சீமான்
”வாரிசு என்றாலே பிரச்னைதான்..அது படமாக இருந்தாலும்; திமுக பாஜகவோடு போக வாய்ப்பு” - சீமான்

திமுக பாஜக-வோடு போக வாய்ப்புள்ளது. திடீரென திமுகவில் சேர்ந்தால் விகாரமாக தெரியும் என்பதால் இப்போதே பாஜகவிடம் சரணடைந்து வேலை செய்கின்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, "எந்த தேசிய கட்சிகளும் தேசிய இனங்களின் உரிமைக்கு எதிராகத்தான் இருக்கும். புதுச்சேரி மட்டுமல்ல டில்லியிலும் இந்த நிலைதான். தலைநகர் டில்லியிலே அரவிந்த் கெஜ்ரிவால் அல்லாடுவதை பார்க்க முடிகின்றது. தேசிய இனங்களின் முன்னுரிமை தேசிய இனங்களுக்கான உரிமை தேசிய இனங்களின் இறையான்மையை பேசுவது எதுவோ அந்த கட்சிதான் இந்திய ஒற்றுமையை நேசிக்கின்றது என்று அர்த்தம்.

முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இருக்கும்போதே மாநில அந்தஸ்த்து கேட்டிருக்க வேண்டும். காங்கிரசும் கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னாட்சி உரிமை இருந்தால் தான் இந்தியா, நாடு என்ற எண்ணம் வரும். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எங்களை வஞ்சித்தால் கோபம் தான் வரும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தியா என்நாடு என்ற எண்ணம் வராததற்கு பல காரணஙகள் உள்ளது. கட்சத்தீவை கொடுத்து விட்டார்கள், அணு உலையை வைக்கின்றார்கள், மீத்தேன் எடுக்கப்படுகிறது. காவிரி படுகையில் மீத்தேன் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், கங்கை படுகையில் இருக்கும் மீத்தேனை ஏன் எடுப்பதில்லை,

இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் போட்டார் பயனில்லை. ஆனால், வருங்கால தலைமுறைக்கு அழுத்தமான அதிகாரம் வரும்போது இந்த தீர்மானம் வலிமை சேர்க்கும். கமல் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு அதன் மீது ஈர்ப்பு இருந்திருக்கும், கமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரவும் எண்ணம் இருந்திருக்கலாம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கேட்கும் ரங்கசாமி குறைந்த பட்ச தேவையில்தானே மத்திய பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும். மாநில அந்தஸ்து கொடுங்கள் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்று கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். அதிமுக எடப்பாடி அணி தற்போது பாஜக-வை எதிர்ப்பது என்ற நகர்வுகளை பார்க்க முடிகின்றது. ஆனால், தேர்தலின்போது தான் உறுதியாக சொல்ல முடியும். திமுக பாஜகவோடு போக வாய்ப்புள்ளது. திடீரென திமுகவில் சேர்ந்தால் விகாரமாக தெரியும் என்பதால் இப்போதே பாஜகவிடம் சரணடைந்து தமிழக அரசு வேலை செய்கிறது.

பாஜக ஆளவேண்டிய அவசியம் இல்லாமல் அவர்கள் பாஜக என்ன நினைக்கிறதோ அதை செயல்படுத்துகிறது. புதிய கல்விக் கொள்கை, இல்லம்தேடி கல்வி, என எல்லா செயல்பாடுகளையும் தமிழக அரசு செய்கிறது. பாஜக ஆளுகிற மாநிலங்களில் கூட மின் இணைப்பை ஆதாரோடு இணைக்கவில்லை. ஆனல், தமிழகத்தில் அவை செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு பாஜக ஆர்.எஸ்.எஸ்-க்கு விசுவாசமான ஆட்சியாக இருக்கிறது. வாரிசு என்றால் படமாக இருந்தாலும் சரி பதவியாக இருந்தாலும் சரி பிரச்னை தான்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com