தமிழ்நாடு
நேற்று மறைமுக தேர்தல் நடைபெறாத இடங்கள் எவை? - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
நேற்று மறைமுக தேர்தல் நடைபெறாத இடங்கள் எவை? - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் நேற்று மறைமுக தேர்தல் நடைபெறாத இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
மறைமுக தேர்தலின் போது நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 63 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 4 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கும் 11 நகராட்சிகளில் துணை தலைவர் பதவிக்கும் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல பேரூராட்சி தலைவர் பதவிக்கு 13 இடங்களிலும் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு 35 இடங்களிலும் தேர்தல் நடைபெறவில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.