தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள்... விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள்... விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள்... விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடு குறித்த பணிகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது.

அதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் திட்டமிட்டுள்ளோம். வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் எண்ணிக்கையை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிகிறது.

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதில் கட்சிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்படும். தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

வாக்குப்பதிவு மையங்கள் 68,000 யிலிருந்து 93,000 உயர்த்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிறப்பு பார்வையாளர்கள் இருவர் நியமிக்கப்படுவர்.

வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் குழு டெல்லி சென்று பின்னர் முடிவெடுக்கப்பட்டு  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com