உச்சநீதிமன்றம் உத்தரவு; நளினி உள்ளிட்டோர் எப்போது சிறையிலிருந்து விடுதலையாவார்கள்?

உச்சநீதிமன்றம் உத்தரவு; நளினி உள்ளிட்டோர் எப்போது சிறையிலிருந்து விடுதலையாவார்கள்?
உச்சநீதிமன்றம் உத்தரவு; நளினி உள்ளிட்டோர் எப்போது சிறையிலிருந்து விடுதலையாவார்கள்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஆன நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் ஆறு பேரும் உடனடியாகவோ அல்லது நாளை காலைக்குள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்

இந்த வழக்கில் தமிழக தரப்பு வாதத்தை பொறுத்தவரை , குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நளினி உள்ளிட்ட ஆறு பேர் தாக்கல் செய்த மனுகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. தீர்ப்பை பொறுத்தவரை, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்தது , ஆறு பேரில் நல்லடத்தை காரணத்தினாலும் , சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறையை மீறாமல் நடந்து கொண்டது, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் , நளினி உள்ளிட்ட ஆறு பேர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்பின் நகல் தமிழக சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். பின்பு , தீர்ப்பின் நகல் சரி பார்த்தபின் , உடனடியாகவோ அல்லது இன்றோ 6 பேரும் விடுதலை செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com