குரூப் 1 தேர்வு முடிவு எப்போது? - TNPSC தகவல்

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, 1,777 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வரும் 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 பணியிடங்களுக்கான உதவி வனக்காவலர் பணிக்கான தேர்வு முடிவுகளும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேரை நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வும் கடந்த நவம்பரில் நடந்த நிலையில், அதன் முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

TNPSC தகவல்
“ராமர் அசைவ உணவை உட்கொள்பவர்” - NCP தலைவரின் கருத்தால் சர்ச்சை; ”கொலை செய்வேன்” என சாமியர் மிரட்டல்!

இதோடு பல்வேறு அரசுத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட 15 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனிடையே குரூப் 2 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 240-யில் இருந்து 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com