பாரதியார் நினைவு தினம் எப்போது? மீண்டும் சர்ச்சை

பாரதியார் நினைவு தினம் எப்போது? மீண்டும் சர்ச்சை

பாரதியார் நினைவு தினம் எப்போது? மீண்டும் சர்ச்சை
Published on

தமிழக அரசு சார்பில் பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதை மாற்ற வேண்டி கொடிப் பிடிக்க் தொடங்கி இருக்கிறார்கள் பாரதி அன்பர்கள்.

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலை பார்ப்பதற்காக எட்டயபுரத்தில் இருந்து 1904ல் சென்னை வந்தார். ஆங்கில அரசின் கெடுபிடிக்கு அஞ்சி 1908ல் புதுவைக்குப் போனார். அங்கே பத்தாண்டுகள் வாழ்ந்தார். பிறகு 1919ல் மீண்டும் கடையம் போக முடிவெடுத்தார். அப்பொழுது கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரிட்டீஷ் அரசால் கைது செய்யப்பட்டு 20 நாள் சிறையில் இருந்தார். இனி ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டு கடையம் போனார். மீண்டும் 1920 சென்னை சுதேசமித்திரன் பணிக்குத் திரும்பினார். ஒரு நாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றவர் அங்குள்ள யானைக்கு பழம் கொடுத்தார். மதம் பிடித்த யானை பாரதியாரை பிடித்து கீழே தள்ளியது. உடனே பாரதியின் நண்பர் குவளை கண்ணன் ஓடிச் சென்று யானையிடம் இருந்து பாரதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பிறகு சில மாதங்கள் நன்றாக இருந்த பாரதி வியிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்தார். 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி 1:30 மணிக்கு காலமானார். அவர் நடுசாமத்தில் காலமானதால் அன்றைய தேதியை 11 என்று வழக்கத்தில் எடுத்து கொண்டனர். ஆனால் அது தவறு என பாரதி ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட ரா.அ.பத்மநாபன் சென்னை மாநகராட்சியில் இருந்து பாரதிக்கான இறப்பு சான்றிதழை பெற்று வெளியிட்டார். அதில் செப்டம்பர் 12 அன்று இரவு 1:30 என்றே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com