மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு? - உயர்நீதிமன்றம் !
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இது குறித்து அக்டோபர் 5 ஆம் தேதி தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரி பீட்டர் ராயன் வழக்கில் மெரினா பராமரிப்பு குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி. மெரினாவில் பொதுமக்களை இன்னும் அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு,கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அரசே முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும்.
மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நடைமுறை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.