\
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் எப்போது..?

ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் எப்போது..?

ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் எப்போது..?
Published on

உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. எனவே அத்தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தியாக வேண்டும். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆனால் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com