சென்னையின் வரலாறு 652 ஆண்டுகள் பழமையானது ! ஆவணப்படுத்திய கல்வெட்டு

சென்னையின் வரலாறு 652 ஆண்டுகள் பழமையானது ! ஆவணப்படுத்திய கல்வெட்டு
சென்னையின் வரலாறு 652 ஆண்டுகள் பழமையானது ! ஆவணப்படுத்திய கல்வெட்டு

சரியாக 652 ஆண்டுகளுக்கு முன்பு ‘மதராசாப்பட்டினம்’ என்ற பெயர் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. 

பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர் மன்னன் கம்பனா -II ஆட்சி காலத்தில் கிருஷ்ணகிரியிலுள்ள பென்னை நாயனார் கோயிலுக்கு அருகிலுள்ள கல்வெட்டில் ‘மதராசாப்பட்டினம்’  நகர் இருந்ததாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு பதிவு பிரிட்டிஷ் நாட்டினர் மெட்ராஸ் வருவதற்கு முன்பே மதராசாப்பட்டினம் இருந்ததாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை 21ஆம் தேதி இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  

இந்தக் கல்வெட்டில் கிழுக்கு கடற்பகுதி நகரங்களான தல்லாமலை, ராஜகம்பீர மலை, புதுப்பட்டினம், நிலங்கரயான்பட்டினம் மற்றும் மதராசாப்பட்டினம் ஆகியவற்றை தொண்டைமானிடமிருந்து விஜய நகர மன்னன் கம்பனா- II தன்வசப்படுத்தியதாக தெரிவிக்கின்றன.

இந்தக் கல்வெட்டின் மூலம் மதராசாப்பட்டினம் 652 ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்தது உறுதியாகிறது. இந்தக் கல்வெட்டு கண்டுபிடிப்பதற்கு முன்பு மெட்ராஸ் நகரம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என நம்பப்பட்டது. இந்தக் கல்வெட்டின் மூலம் (மெட்ராஸ் நகரம்)சென்னை நகரம் மிகவும் 650 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com