வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவுறுத்தல்

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவுறுத்தல்

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவுறுத்தல்
Published on

தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தனது பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ்அப், மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு சில தினங்களுக்கு முன் சில கோரிக்கையை முன் வைத்தது. அதில் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் 10 சதவித அறிவுறுத்தல்களுடன் ஒருபக்க அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு தகவலை பார்வேர்டு செய்வதற்கு முன்பு அதன் உறுதித்தன்மையை உணர்தல் வேண்டும். பரிமாறப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிதல் வேண்டும், தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரபல வார்த்தைகளால் பகிரப்படும் லிங்க்-ல் உள்ள எழுத்துகளை சரிபார்த்தல் வேண்டும், நம்ப முடியாத தகவல்கள் பகிரப்படும்போது அது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com