27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரத யாத்திரை... நோக்கம் இதுதான்..!

27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரத யாத்திரை... நோக்கம் இதுதான்..!
27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரத யாத்திரை... நோக்கம் இதுதான்..!

தமிழகத்திற்குள் இன்று நுழைந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சென்றடைய உள்ளது.

கேரளாவை மையமாகக் கொண்டு மகாராஷ்டிராவில் இயங்கும் ஸ்ரீ ராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி எனும் அமைப்பு சார்பில், அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது.

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது, இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிறுவுவது, ராமாயணத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வருவது, உலக இந்து தினம் உருவாக்கி கடைப்பிடிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராமர் கோயிலின் மாதிரியை யாத்திரையில் வைத்துள்ளனர்.

இந்த யாத்திரை, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகத்தை அடைந்தது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் புனலூர் வழியாக, செங்கோட்டை பகுதியில் நுழைந்த யாத்திரை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், விருதுநகர், மதுரை வழியாக வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி, கடந்த 1990-ம் ஆண்டு அத்வானி தலைமையில் மிகப்பெரிய ரத யாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் கலவரம் நடந்தது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆதரவோடு கேரள அமைப்பின் சார்பில் தற்போது மீண்டும் யாத்திரை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com