இப்படியெல்லாம் கூட நடக்கும்!! வெளிநாடுகளுக்கு வேலை தேட செல்லும் தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

சுற்றுலா விசாவில் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளுக்கு சென்று வேலை தேடுபவர்கள் சட்டவிரோத செயல்களில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் சென்று ஐடி வேலை தேட நினைக்கும் தமிழர்கள் சட்டவிரோதமான முறையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கப்படுவதாக வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயல்களைச் செய்ய மறுத்தால் மின்சார அதிர்ச்சி கொடுப்பது, உடல்ரீதியாக துன்புறுத்துவது போன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 83 தமிழர்களை மீட்டுள்ளனர் என்றும் இந்திய குடிமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

மாதிரிப்படம்
நாய்களுக்காக பிரத்யேக விமானம்... ஒரு பயணத்துக்கு மட்டும் இத்தனை லட்சம் கொடுக்கணுமா?

அதேபோல, மத்திய அரசிடம் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்பாராத விதமாக சிக்கலை சந்திக்கும் தமிழர்களுக்கு உதவிசெய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணையம் உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com