What Seat Denials DMK and VCK Says
திருமாவளவன் - ஸ்டாலின்web

யார் யாருக்கு சீட் இல்லை? திமுக - விசிகவின் பதில் என்ன? மாற்று முகமா.. திட்டமிட்ட நிராகரிப்பா?

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Published on

திமுகவுக்குள் நிலைமை இப்படியிருக்க, கூட்டணிக் கட்சியான விசிகவில் 2021இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிலும், விசிகவின் பிரதான முகங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆளூர் ஷாநவாஸ் உட்பட எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திமுகவின் 164 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளான சிபிஐ மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளிட்டது. முன்னதாக திமுக வேட்பாளர் பட்டியலில் தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பெரும்பன்மையாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோன்று சென்னையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எழும்பூர், தி.நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய 7 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், விசிகவில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 3 பேருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

What Seat Denials DMK and VCK Says
அமைச்சர் மனோ தங்கராஜ்கோப்புப்படம்

அண்மை காலங்களாக அமைச்சர் காந்தி பொதுவெளிகளில் பேசும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதன் விளைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அனைவரும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதால் இம்முறை சீட் வழங்கவில்லை என பேசப்படுகிறது.

அதேபோல், அமைச்சர் மனோ தங்கராஜூம் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி உள்ளார். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு வந்ததும், அண்மையில் வெளியான வீடியோவால் கட்சியினரே அதிருப்திக்கு ஆளாகும் சூழல் மனோ தங்கராஜுக்கு ஏற்பட்டுள்ளது. இடையில் ஒருமுறை அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு பிறகு மீண்டும் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பத்மநாபபுரம் தொகுதி, இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மனோஜ் தங்கராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்த முறை போட்டியிடவில்லை என்றாலும் அவருக்கு பதில் அவரது மகன் கவுதம சிகாமணி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

What Seat Denials DMK and VCK Says
ஆளூர் ஷாநவாஸ்web

திமுகவுக்குள் நிலைமை இப்படியிருக்க, கூட்டணிக் கட்சியான விசிகவில் 2021இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிலும், விசிகவின் பிரதான முகங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆளூர் ஷாநவாஸ் உட்பட எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகிய 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆளுங்கட்சியுடன் அதிக நெருக்கத்தை கொண்டு வருவதும் கட்சிக்குள் இருக்கும் சீனியர் ஜூனியர் பாலிடிக்ஸ் காரணத்தினாலும் இவருகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com