திருச்செந்தூர் கடல் அரிமானம்.. காரணம் என்ன..? தெளிவான வரைகலை விளக்கம்!
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற கனத்த நாளில் கடல் உள்வாங்கும். சில நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கடற்கரையை தாண்டி வெளியே அலையடிக்கும். இதுதொடர்பாக அந்தச் சமயத்தில் எடுக்கப்படும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். தவிர, சுற்றுலாப் பயணிகளும் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அந்தக் காட்சியை செல்பியாக எடுத்து மகிழ்வர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கடல் அரிமானத்திற்கு காரணம் என்ன? அதுகுறித்து தெளிவான வரைகலை விளக்கத்தை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.