What reason of Reason Only 40% Salary for Child Helpline Staffs
Child helpline web

'Child helpline' பணியாளர்களுக்கு 40% ஊதியம் மட்டுமே.. காரணம் இதுதான்!

ஏப்ரல் மாதத்தில் 60% ஊதியக் குறைப்பால் சைல்ட் ஹெல்ப்லைன் ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Published on

தமிழகத்தில் 1098 சைல்ட் ஹெல்ப்லைன் பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தில் 40 சதவீதம் மட்டுமே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வழக்கமாக 18,000 ரூபாய் வரை ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கு தற்போது 7,000 முதல் 8,000 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே ஊதிய நிலுவையால் அவதிப்பட்டுவந்த நிலையில், தற்போது பகுதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பணியைவிட்டு விலக நேரிட்டால், குழந்தைகள் கடத்தல் மீட்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Child helpline
Child helpline web

இதுகுறித்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்க இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் நிதி தவணை முறையில் வருவதால் தற்போது முதற்கட்ட நிதி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது நிரந்தர ஊதியக் குறைப்பு அல்ல என்றும் அடுத்த தவணை நிதி வந்தவுடன் முழு ஊதியமும் வழங்கப்படும்” என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

What reason of Reason Only 40% Salary for Child Helpline Staffs
”முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார்?” - சட்டப் பேரவையில் முதல்வரிடம் கொந்தளித்த பிரேமலதா!
What reason of Reason Only 40% Salary for Child Helpline Staffs
நம்பிக்கை வாக்கெடுப்பு.. வெற்றிபெற்ற தவெக.. சபையில் கர்ஜித்த முதல்வர் விஜய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com