12 மணி நேரம் நீடிக்கும் குளிர்.. என்ன காரணம்?
டிசம்பர் இறுதியில் வீசும் குளிர் காற்று சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்திலேயே அதிகமாக வீசி வருகிறது. இதற்கு என்ன காரணம், இனிவரும் நாட்களில் குளிர் காற்று எப்படி இருக்கும் என்பது குறித்து புதிய தலைமுறையின் காலநிலை அணி வழங்கும் தொகுப்பைப் பார்க்கலாம்.
டிசம்பர் இறுதியில் வீசும் குளிர் காற்று சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்திலேயே அதிகமாக வீசி வருகிறது. இதற்கு என்ன காரணம், இனிவரும் நாட்களில் குளிர் காற்று எப்படி இருக்கும் என்பது குறித்து புதிய தலைமுறையின் காலநிலை அணி வழங்கும் தொகுப்பைப் பார்க்கலாம். மார்கழி தொடங்குவதற்கு முன்பாக கார்த்திகை இறுதியிலேயே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இரவு 7 மணிக்கு தொடங்கும் குளிர்காற்று படிப்படியாக அதிகரித்து மறுநாள் காலை 7 மணிவரை வீசுகிறது. இது குறித்து வானிலையாளர்களிடம் கேட்கும்போது, வடமாநிலங்களில் வீசக்கூடிய குளிர்காற்று முன்பாகவே கிழக்குத் திசை காற்றாக, தமிழகத்தின் வடக்கு,வடகிழக்கு திசைகளில் வீசுகிறது என்று கூறுகின்றனர்.
மேலும், தற்போது தமிழ்நாட்டில் பெரிதாக மழை இல்லாததால் வானம் தெளிவாகஉள்ளது; இதனால் மேகக் கூட்டம் இல்லாமல் குளிர் காற்றின் தன்மை அதிகம் நிலப்பரப்புக்கு வருகிறது என்றும், வரக்கூடிய நாட்களில் படிப்படியாக ஈரப்பதம் அதிகரித்து குளிர்காற்றும் மூடுபனியும் தீவிரமடையும் என்றும் வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காலநிலை மாற்றம் முக்கியக் காரணம் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் புதிய தலைமுறையின் காலநிலைஅணியிடம் பேசினார்.

