“ரஜினியும், கமலும் நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்ததில்லை’’- விஜய பிரபாகரன்

“ரஜினியும், கமலும் நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்ததில்லை’’- விஜய பிரபாகரன்

“ரஜினியும், கமலும் நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்ததில்லை’’- விஜய பிரபாகரன்
Published on

நடிகர்கள் ரஜினிகாந்தும்‌, கமல்ஹாசனும் நடிகர் சங்கத் தேர்தலைக் கூட தனித்தோ, இணைந்தோ சந்தித்ததில்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் காட்டமாக பேசியுள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் தேமுதிக கட்சி சார்பில் கொடி நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது “ ரஜினிகாந்தும்‌, கமல்ஹாசனும் நடிகர் சங்கத் தேர்தலைக் கூட தனித்தோ, இணைந்தோ சந்தித்ததில்லை.

தங்களுக்கு இருக்கும் பிரபலத்தை வைத்து யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். ஆனால் அரசியலை பொருத்தவரை அதில் ஈடுபடுவர்களுக்கு மனசு நன்றாக இருக்க வேண்டும். ரஜினியும் கமலும் மக்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள் என்ற கேள்வி தற்போது வரை இருக்கிறது” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com