பாரதிதாசனைக் கொண்டாட காரணம் என்ன?.. ஆ.ராசா சொன்ன நெகிழ்ச்சிப் பதில்!

பாரதிதாசனைக் கொண்டாட காரணம் என்ன?.. ஆ.ராசா சொன்ன நெகிழ்ச்சிப் பதில்!
பாரதிதாசனைக் கொண்டாட காரணம் என்ன?.. ஆ.ராசா சொன்ன நெகிழ்ச்சிப் பதில்!

”பல பிரதமர்களை காமராஜர் உருவாக்கி இருந்தாலும், தமிழ்நாடு என்ற பெயரை அவர் சொல்லவில்லை” என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் பொங்கல் விழா இசை சங்கமம் நிகழ்ச்சி இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய ஆ.ராசா, “திராவிட மாடல் என்ற பெயரை உச்சரிக்க முடியாத உதடுகள் இந்த மண்ணைவிட்டு ஓடவேண்டிய சூழலில் இதனை ஏற்படுத்தியுள்ளது சிறப்பு. இந்த பொங்கல், திராவிட இனத்தின் அடையாளம். திராவிடம் என்றால் தமிழ். அதில், கவி பாட மூன்று கவிஞர்கள் வந்துள்ளார்கள். கலைஞருக்கு எது அடையாளம்? மொழியை முன்னிறுத்தி இனத்தை காப்பது ஆகும். பாரதிதாசனை ஏன் கொண்டாடுகிறோம்? காதலை, இயற்கையைப் பாடியவர்கள் அதிகம். ஆனால், சமூகத்தைப் பாடியவர்கள் குறைவு. சமூகத்தைப் பற்றி அதிகம் பாடியவர் பாரதிதாசன். இறுதி காலக்கட்டத்திலும் விபூதி பூசாதவர் கலைஞர்.

’ஒருவன் இறந்துவிட்டால் உயிர் எங்கே போகிறது’ என புத்தரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு புத்தர் மறு கேள்வி ஒன்றைக் கேட்டார். ’ஒரு விளக்கு அணைந்தது என்றால் ஒளி எங்கே போகிறது’ என அவர் மறுகேள்வி எழுப்பினார். கவிதை என்பது மொழியினை இன்னொரு வகையாக கையாள்வது ஆகும். இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் வைத்தவர் கலைஞர். தமிழகத்தில் பல அணைகளை கட்டியவர், பல பிரதமர்களை உருவாக்கியவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் என்ற பெருமையெல்லாம் காமராஜருக்கு இருந்தாலும், அவர் ’தமிழ்நாடு’ என்ற பெயரைச் சொல்லவில்லை. ’அவருக்கு வீழ்ச்சி துவங்கியது’ என இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள்; காரணம், அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com