குற்றவாளிகளுடன் காவல்துறையினர் கூட்டு? - உயர்நீதிமன்றம் சந்தேகம்

குற்றவாளிகளுடன் காவல்துறையினர் கூட்டு? - உயர்நீதிமன்றம் சந்தேகம்

குற்றவாளிகளுடன் காவல்துறையினர் கூட்டு? - உயர்நீதிமன்றம் சந்தேகம்
Published on

குற்றவாளிகளுடன் காவல்துறையினர் கூட்டு சேர்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த தொழிலாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து பின்னலாடை நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளர் குமரப்பன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்டுகள் இயந்திரத்தனமாக செயல்பட்டு முடித்து வைத்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். 

காவல்துறையினர் குற்றவாளிகள் உடன் கூட்டுசேர்ந்துள்ளதாக சந்தேகம் தெரிவித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இவ்வளவு வழக்குகளை முடிக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து வரும் 25-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com