இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?
Published on

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.95 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. அண்மைகாலமாக பெட்ரோல், டீசல் விலை வெகு விரைவாக அதிகரித்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்தது. 

கடந்த மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 53 காசுகள் குறைந்து ரூ.76.35 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.72.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை சரிவின் எதிரொலி காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தொடர்தால் சர்வதேச சந்தையில் பொருளாதார வளர்ச்சி குறைந்து, பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு அதிகம் என தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.95 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 34 காசுகளும் டீசல் 39 காசுகளும் குறைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com