கோயம்பேடு குடும்பத்தினர் இறந்ததற்கு ஏசி காரணமா?: மருத்துவர் கருத்து

கோயம்பேடு குடும்பத்தினர் இறந்ததற்கு ஏசி காரணமா?: மருத்துவர் கருத்து
கோயம்பேடு குடும்பத்தினர் இறந்ததற்கு ஏசி காரணமா?: மருத்துவர் கருத்து

சென்னை கோயம்பேட்டில் ஏசியில் மின்கசிவால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழந்த நிலையில் அவர்கள் எவ்வாறு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேட்டை சேர்ந்த சரவணன், தனியார் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு சரவணன், அவரது மனைவி கலையரசி, 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டில் ஏ.சி. போட்டு உறங்கியுள்ளனர். விடிந்து வெகுநேரம் ஆகியும் சரவணன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை.

இதனையடுத்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 3 பேரும் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் எந்தக் காரணத்தால் 3 பேரும் உயிரிழந்திருக்ககூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

1.ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டதால் மின் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். மின் அழுத்த மாறுபாட்டால் ஏசியின் கார்பன் மோனாக்சைடு என்ற வாயு அறைக்குள் பரவி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இறந்து இருக்கலாம்

2. கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்தால் நமது உடல் ஆக்ஜிசனை ஏற்காது. அதனால் மூளை செயலிழந்து இறப்பு ஏற்பட்டிருக்கும்

3. கால்வாய்க் கரையோரங்களில் சல்ஃப்யூரிக் வாயு ஏசியின் பாகங்களை சேதப்படுத்தி இருக்கும். ஏசியின் வாயுக்கள் சேதப்பட்ட பாகங்கள் வழியாக அறையினுள் நுழைந்து இறப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com