தக்காளி
தக்காளி கோப்பு படம்

தாறுமாறாக உயரும் தக்காளி விலை: சமையலில் தக்காளிக்கு மாற்று என்ன?

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தக்காளி இல்லாமல் சமைக்கும் வழிகளை நாடுகின்றன பல குடும்பங்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தக்காளிக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
Published on

தக்காளியில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், போலேட், லைக்கோபீன், கரட்டின் போன்ற சத்துகள் இருக்கின்றன. தக்காளியை அதன் சத்துகளுக்காக மட்டுமல்லாமல், சுவைக்காகவும் நம் மக்கள் அதிகம் பயன்படுத்துவர். இருப்பினும் தற்போது தக்காளி விலை உயர்ந்துவருவதால், வீடுகளில் தக்காளி சேர்க்காமல் செய்யும் உணவு வகைகளை தயாரிப்பதற்கு முன்னுரிமை தருகின்றன குடும்பங்கள்.

tomatoes
tomatoespt desk

குறிப்பாக புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புலாவ், அவியல், குருமா, மோர்க்குழம்பு, தயிர் என தக்காளி சேர்க்கத் தேவையில்லாத உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ரசத்திலும் தக்காளிக்கு பதில் எலுமிச்சை சேர்த்து செய்கிறார்கள். இருப்பினும் தக்காளியின் சுவைதான் வேண்டும் என்பவர்களுக்கும் ஒரு யோசனை சொல்கிறார் சென்னை அரசு பொது மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி.

தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி?

“சந்தையில் பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றின் விலையும் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றுக்குமே மாற்றை தேடுகிறார்கள் நம் மக்கள். இப்படியானவர்கள் தக்காளிக்கு பதில் புளி, எலுமிச்சையை பயன்படுத்தி உணவில் தேங்காய் சேர்த்து செய்யலாம். செயற்கையான வினிகரை சமையலில் சேர்ப்பதை தவிர்க்கலாம். சிவப்பு குடை மிளகாய், மாதுளம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை பயன்படுத்தலாம்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com