ராமநாதபுரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ராமநாதபுரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்pt web

உதயநிதி பேச்சு | ராமநாதபுரம் தொகுதிக்கு இப்படியொரு சென்டிமென்ட் இருக்கா? கேக்கவே புதுசா இருக்கே?

தேர்தலில் ராமநாதபுரம் தொகுதிக்கென்று ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. அது குறித்துதான் இந்தத் தொகுப்பில் பார்க்கப் போகிறோம்..,
Published on

“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே ராமநாதபுரத்தில்தான் அண்ணன் நவாஸ்கனிக்காக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். நாற்பதுக்கு நாற்பது வெற்றி வெற்றோம். அதேபோல இன்றைக்கு, சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கியிருக்கிறேன். தலைவர் சொன்னதுபோல 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற வேண்டும்” துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பேசிய வார்த்தைகள் இவை.

உதயநிதி ஸ்டாலின், சென்டிமென்ட் எனப் பொருள்படும் விதத்தில் பேசவில்லை என்றாலும் ராமநாதபுரம் தொகுதிக்கென்று ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. அது குறித்துதான் இந்தத் தொகுப்பில் பார்க்கப் போகிறோம்..,

தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் பல்வேறு வியூகங்கள், யுக்திகள், நம்பிக்கைகளைப் பின்பற்றி தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். நல்ல நேரத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்வது, அவர்களுக்கு விருப்பமுடைய கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்குவது, குறிப்பிட்ட காரில் பிரசாரத்தை மேற்கொள்வது, குறிப்பிட்ட இடத்தில் பிரசாரத்தைத் தொடங்கி குறிபிட்ட இடத்தில் பிரசாரத்தை முடிப்பது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அவற்றில் சில நம்பிக்கைகளின் அடிப்படையிலும் சில விஷயங்கள் தலைவர்களின் வசதிக்குத் தகுந்தவாறும் இருக்கும்.

ராமநாதபுரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
‘ஊனே உயிரே..!’ காதலர் தின சிறப்புப் பகுதி | ”இக்கால காதலும்.. மனித உணர்வுகளும்..” - கவிஞர் வெய்யில்!

அதென்ன ராமநாதபுரம் சென்டிமென்ட்

மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும் நம்பிக்கையளிக்கவும்கூட சில விஷயங்களை அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கடைபிடிப்பார்கள். அரசியல் தலைவர்களுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் இருப்பதைப்போல தமிழ்நாட்டில் சில தொகுதிகளுக்கும் உண்டு. அப்படி ஒரு செண்டிமெண்டை பெற்றிருக்கும் தொகுதி இராமநாதபுரம். ஆம், 1967 முதல் 2021 வரை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில், எந்தக் கட்சி, எந்தக் கட்சிக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ அவர்கள்தான் ஆட்சியமைத்திருக்கிறார்கள் என்கிற விஷயம்தான் அது. இதுகுறித்த பெருமிதமும் அந்தத் தொகுதி மக்களுக்கு உண்டு. ஆனால், இந்தப் பட்டியலில் இன்னொரு தொகுதியும் உண்டு அது நாமக்கல். தமிழ்நாட்டில் இந்த இரண்டு தொகுதிகளுக்கு இப்படியொரு பெருமை இருக்கிறது.

தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக்
தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக்pt web

1967 முதல் கடந்த 2016 தேர்தல் வரை கணக்கில் எடுத்துக்கொண்டால், ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, நாமக்கல், ராமநாதபுரம், மொடக்குறிச்சி என மொத்தமாக ஏழு தொகுதிகளுக்கு இப்படியொரு பெருமை இருந்தது. ஆனால், கடந்த 2021 தேர்தலில், இராமநாதபுரம், நாமக்கல் தவிர மற்ற தொகுதிகளில் முடிவுகள் வேறு மாதிரியாக வந்தன. அதனால், சில தொகுதிகள் இந்தப் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டன..,

ராமநாதபுரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
‘ஊனே உயிரே..!’ காதலர் தின சிறப்புப் பகுதி : சமூக ஊடகங்களும், தற்கால காதலும்.. கானலும் உண்மையும்!

இராமநாதபுரம் தொகுதியைப் பொறுத்தவரை, இராமநாதபுரம் நகராட்சி, கீழ்க்கரை மண்டபம் பேரூராட்சி மற்றும் இராமநாதபுரம் தாலுகா, இராமேஸ்வரம் தாலுகாவை உள்ளடக்கிய பல கிராமங்களை உள்ளடக்கியது. 1967-2001 வரை 9 முறை, திமுக, அதிமுக என மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சிகளே நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. 2006-ல் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஹசன் அலியும், 2011-ல் அ.தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்றிருக்கின்றனர். 2016-ல் நேரடியாக ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.கவே வெற்றி பெற்றிருக்கிறது. மருத்துவர் மணிகண்டன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2021 தேர்தலில், திமுகவின் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது திமுகவே ஆட்சியில் இருக்கிறது..,

இப்படித் தேர்தல் முடிவுகள் வருவது, அங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதாரம் காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், சிலரோ அது இயல்பாக நடக்கிறது என்றே கூறுகின்றனர்.

ஒருவேளை இந்தப் பட்டியலில் வேறேனும் தொகுதிகள் விடுபட்டிருந்தாலும் கமெண்டில் தெரிவியுங்கள் மக்களே..,

ராமநாதபுரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
”பும்ராவின் நைட்மேர் என் வீட்டிலும் தொடர்ந்தது..” - 4 வயது மருமகன் செய்ததை கூறிய மிட்செல் மார்ஷ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com