இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய இரு மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய இரு மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய இரு மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற மினி லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் அச்சிறுபாக்கம் அருகே உள்ள அமணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் சஞ்சய் மற்றும் ராமன் என்பவரின் மகன் சஞ்சய் என்பதும் தெரியவந்தது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் இவர்கள், பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்று திரும்பும் வழியில் தூக்க கலக்கத்தில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவந்ததால் விபத்து நடந்தது தெரிய வந்தது.

இந்த விபத்து குறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com