அமைச்சர் பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்களின் முழுவிவரம்; அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை 17) காலை 7 மணி முதல் இரவு வரை என 13 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று அமலாக்கத் துறை அலுவலகத்திலும் ஆஜரானார். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிTwitter

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2006-2011 காலகட்டங்களில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன் மற்றும் உறவினர்கள் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் அள்ளுவதற்கு உரிமை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோத சுரங்கத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் பினாமி கணககில் டெபாசிட் செய்யப்பட்டது. பல பரிவர்த்தனைகள் மற்றும் கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் இந்தோனேசியாவில் உள்ள பிடி எக்ஸெல் மென்ஜின்டோ ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் யுனிவர்சல் வென்சர்ஸ் பிசினஸ் இரு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன’ என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தோனேஷியா நிறுவனம் பெயர் அளவுக்கு 41.57 லட்சத்திற்கு இவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் 2022ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் இந்த வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதில் மூலம் ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 81.7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவிர, வெளிநாட்டு நாணயங்கள் வாயிலாக, அதாவது பிரிட்டிஷ் பவுண்டுகள் 13 லட்ச ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணையை தவறாக வழிநடத்தும் வகையில் பணம் குடும்பத்திற்கு சொந்தமான மருத்துவமனைக்கு உரிமையானது என பொன்முடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அது, பொய்யானது என அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்திற்கு நம்பத் தகுந்த விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிட்விட்டர்

சொத்துக்கள் நிறுவனங்களைப் பெறுவதற்கும் பிற முதலீடுகளுக்கு செல்வதற்கும் பயன்படுத்தப்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இருந்து பெறப்பட்ட சட்டவிரோத வருமானத்தின் தடயத்தை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது. மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகள், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 41.9 கோடி ரூபாய் குற்றத்தின் நேரடி வருமானமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அது நிலையான வைப்புத் தொகையாக இருந்ததால் இந்த சொத்துக்கள் பி எம்எல்ஏ சட்டத்தின்படி முடக்கப்பட்டுள்ளது’ என அமலாக்கத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com