அதிமுக பொதுக்குழுவில் காலையிலிருந்து நடந்தது என்ன? - டைம்லைன்

அதிமுக பொதுக்குழுவில் காலையிலிருந்து நடந்தது என்ன? - டைம்லைன்

அதிமுக பொதுக்குழுவில் காலையிலிருந்து நடந்தது என்ன? - டைம்லைன்
Published on

அதிமுகவில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் காலையிலிருந்து நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

காலை 5 மணி:

  • பொதுக்குழு கூட்டத்திற்கு காலை 5 மணி முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு வரத்தொடங்கினர்.

காலை 7 மணி

  • காலை 7 மணியளவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரத்தொடங்கி, பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு வந்தனர்.

காலை 8 மணி

  • அதன் பின்னர் காலை 8.40 மணியளவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பசுமை வழிச்சாலை இல்லத்திலிருந்து வானகரம் பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார்.
  • வரும் வழியில் பசுமைவழிச் சாலை, சேத்பட், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கீழ்ப்பாக்கம் மதுரவாயல், நெற்குன்றம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்ததால் கால தாமதமாக வந்தடைந்தார்.
  • காலை 8.50 மணிக்கு பசுமை வழிச்சாலை வீட்டில் பூஜைகள் முடித்து புறப்பட்ட ஓபிஎஸ் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு வழியாக எடப்பாடி பழனிச்சாமி சென்ற அதே வழியில் வந்தார்.

காலை 10 மணி

  • பின்னர் ஒ.பன்னீர்செல்வம் மட்டும் மாற்று வழியாக நெற்குன்றத்தில் இருந்து மாற்று வழியாக வந்து காலை 10:30 மணிக்கு வானகரம் பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு வந்தார்.
  • காலை 10:35 மணிக்கு பொதுக்குழு கூட்ட அரங்கத்திற்கு உள்ளே வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு எதிராக முழக்கங்களை இ.பி.எஸ் ஆதரவாளர்கள் எழுப்பினர். பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம், ஒற்றை தலைமை அவசியம் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
  • பின்னர் காலை 10:45 அளவில் பொதுக்குழு கூட்ட அரங்கில் உள்ளே இருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி வைகைச் செல்வன் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களை சமாதானம் செய்தனர்.
  • காலை 10.50 மணி அளவில் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகருக்கு எதிராகவும் பொதுக்குழுவில் தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பி வந்த நிலையில் பொதுக்குழு மேடையில் செல்லாமல் வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் இருவரும் மேடையில் இருந்து கீழே இறங்கினர்.

காலை 11 மணி

  • பின்னர் சரியாக 11.30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுக் கூட்டம் நடந்த அரங்கத்திற்கு உள்ளே வந்தார். அவருக்கு மலர்கள் கொடுத்து, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுத்து பொதுக்குழு நடக்கக்கூடிய கூட்டத்திற்கு உள்ளே அழைத்து சென்றார்கள்.
  • காலை 11:35 மணி அளவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மரியாதை இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்திய பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
  • பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கிய உடன் 11.45 மணியளவில் கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் அனுமதி அளிக்கப்பட்டு ஏகமனதாக அதிகாரபூர்வ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
  • காலை 11 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருபத்திமூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் கேபி முனுசாமி மேடையில் தெரிவித்தார்கள்.

நண்பகல் 12 மணி

  • பின்னர் நண்பகல் 12 மணியளவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகனுக்கு 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு கொடுக்கிறோம் கட்சியில் ஒற்றை தலைமை அவசியம் தொண்டர்கள் விரும்புகிறார்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்கள் போல ஒற்றை தலைமை தற்போது அவசியம் என கோரிக்கை மனுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்பதாக பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்டது.
  • நண்பகல் 12.10 மணியளவில் அதிமுக அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 அன்று காலை 9.15 மணிக்கு நடைபெறும் என அவை தலைவர் தமிழ் மகேன் உசேன் அறிவித்தார்.
  • இந்த சம்பவம் தொடர்ந்து 12.15 மணி அளவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவருக்கு எதிரான கோஷம் எழுப்பினர். சிலர் அவர் மீது வாட்டர் பாட்டில் வீச முயன்றனர்.
  • நண்பகல் 12.20 மணியளவில் கட்சியின் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேடையில் வால், கிரீடம் மலர் கொத்து கொடுத்து அவருடைய ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
  • பின்னர் நண்பகல் 12.45 மணியளவில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்குவ் சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது.
  • வானகரத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வேறு, வேறு பாதையில் பயணித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com