தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
தமிழக வெற்றிக் கழகம் மாநாடுமுகநூல்

TVK Madurai Conference|எப்படி இருக்கும் தவெக எதிர்காலம்? பலம், பலவீனம், வாய்ப்புகள் என்ன?

நட்சத்திர அந்தஸ்து, ரசிகர் பட்டாளம் ஆகியவையே விஜயின் மிகப்பெரிய பலம். அதேபோல விஜய் என்ற ஆளுமையை மட்டுமே சார்ந்திருப்பதும், கட்சியில் 99 சதவீதம் புதிய முகங்கள் இருப்பதும் அதன் பலவீனம் ஆகும்.
Published on
Summary

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளநிலையில், அக்கட்சியின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் குறித்து இந்த செய்தி விவரிக்கிறார்

தவெகவின் பலம் இதுதான்

விஜய் உடைய மிகப் பெரிய பலம் அவரோட நட்சத்திர அந்தஸ்தும், அவருக்கான ரசிக பட்டாளமும். அவருடைய முதல் பலம் இதுதான்! அடுத்த பலம், இளைஞர்கள்! முதல் முறை வாக்காளர்கள்ல பெரும்பான்மையினர் ஆதரவு விஜய்க்கு கிடைக்கும்னு கணிக்கப்படுது. இயல்பா இதுல கணிசமானவங்க விஜயோட ரசிகர்கள்னாலும், ரசிக வட்டத்துக்கு வெளியே இருக்குற இளைஞர்கள்கிட்டேயும் விஜய்க்கு ஓர் ஈர்ப்பு இருக்குறதைப் பார்க்க முடியுது.

TVK Madurai Maanadu
TVK Madurai MaanaduTVK Madurai Maanadu

புது கட்சி, புது முயற்சி… ஒரு முறை ஆதரவு கொடுத்துதான் பார்ப்போமேங்கிற குரலைக் கேட்க முடியுது. ரசிகர்கள் வட்டத்ததைப் பொறுத்த அளவுல, Fresh young blood என்ன சொன்னாலும் செய்றதுக்கு தயாரா இருக்குறவங்க… ஆக, எப்படி பார்த்தாலும், இளைஞர்கள் ஒரு பெரிய பலம்தான்! அடுத்தது: Clean image இப்போதுதான் முதல்முறையாக அரசியலுக்கு வர்றார்ங்கிறதால, இதுக்கு முன்னாடி ஆட்சி அதிகாரத்தில் இருந்தவங்க, இருக்கிறவங்க மேல சொல்லப்படுறதுபோல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பெரிய குற்றச்சாட்டுகள் ஏதும் விஜய் மேல கிடையாது.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
TVK Madurai Conference|திரும்பும் இடமெல்லாம் சிக்கல்.. தொடர்ச்சியாக தடைகளை சந்திக்கும் தவெக மாநாடு..

இந்த தூய்மை பிம்பம் இன்னொரு பலம்! கட்சி கட்டமைப்பு அடுத்தது, உறுப்பினர் சேர்க்கைல ஆரம்பிச்சு கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும் கட்சி கட்டமைப்பை வலுவா உருவாக்குற வேகம்! பல நடிகர்கள் இந்திய அரசியல்ல கோட்டை விட்ட இடம் இது. விஜய் சுதாரிக்கிறார்! அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டு அரசிலோட உயிர் எங்கே இருக்குங்கிறதை புரிஞ்சுக்கிட்டு, தமிழ் அரசியலைக் கையில் எடுத்ததும், மத நல்லிணக்கம், சமூகநீதின்னு இந்த மண்ணோட அடித்தள விழுமியங்களை அரசியல் நிலைப்பாடா அறிவிச்சதும், அதுல உறுதிப்பாடு காட்டறதும் விஜயோட அடுத்த பலம்!

பலவீனங்கள் என்னென்ன?

தவெகவோட பெரிய பலம் எதுவோ அதுவே பெரிய பலவீனமும்! யெஸ்.. விஜயோட charismaவை மட்டுமே பெருசா கட்சி சார்ந்திருக்கிறதுதான் தவெகவோட பெரிய பலவீனம்! கட்சியில 99% பேர் புது முகங்கள்கிறதும், அரசியல் அவங்களுக்கு முற்றிலும் புதுங்கிறதும் பெரிய பலவீனம்! விஜயோட கூட்டங்கள் ஷோ மாதிரி இருக்கிறதுதான் இதுவரைக்கும் பெரிய ஈர்ப்பா எல்லார்கிட்டேயும் போய் சேருது. அதையேதான் பலவீனமாகவும் சொல்றாங்க! சினிமாவுல எழுதி கொடுக்குறதை பேசுற மாதிரியேதான் அரசியல்லேயும் நடந்துக்கிறாரு. இப்ப வரைக்கும் ஒரு ஃபார்மலான செய்தியாளர் சந்திப்பைகூட நடத்தலைங்கிறதெல்லாம் பெரிய மைனஸ்தான்! எல்லாத்துக்கும் மேல பெரிய பலவீனமா பார்க்கப்படுறது, டோக்கனிஸ பாலிடிக்ஸ் தாண்டி இன்னமும், மக்கள் மத்தியில விஜய் களத்துல முழுமையா நிற்கலைங்கிறது!

வாய்ப்புகள் இருக்கா?

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பலவீனப்பட்டிருக்கிற சூழல்ல, விஜய்க்கு 2026 தேர்தல் ஒரு நல்ல வாய்ப்புன்னு சொல்லலாம்! திமுக, பாஜக இரண்டையும் எதிர்க்குறதால இந்த இரு கட்சிகளோட எதிர்ப்பு ஓட்டுகளும் சிதறும்போது தவெகவுக்கு அது பெரிய அனுகூலமா அமைய வாய்ப்பு இருக்கு! அபாயங்கள் (Threats) எப்படி விஜய்க்கு அவருடைய பேன் பேஸ் மிகப் பெரிய பலமோ, அவங்க ரசிகர்கள்ன்ற பெயர்ல கட்டுப்பாடு இல்லாமல் பண்ற சில அலப்பறைகள் கட்சிக்கு மிகப் பெரிய அபாயம்! அரசியல் தெளிவோ முதிர்ச்சியோ இல்லாம அவங்க அரசியல் களமாட முற்படுறதை கட்டுப்படுத்தலன்னா தவெகவுக்கு இது ஒரு பிம்ப சரிவை உண்டாக்கக் கூடும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com