விக்கிரவாண்டியில் 82.48% வாக்குப்பதிவு; யாருக்கு சாதகம்? 20 ஆண்டுகால இடைத்தேர்தல் வரலாறு சொல்வதென்ன?

பல்வேறு காரணங்களால் இடைத்தேர்தல்களில் அதிகமாக வாக்குப்பதிவாகிறது... வாக்கு சதவிகிதம் அதிகமாகும்போது அது யாருக்கு சாதகமாக இருக்கும்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்pt web

இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாவது ஏன்?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மொத்தமாக 82.48 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது... பொதுவாகவே இடைத்தேர்தல்களில் வாக்குபதிவு அதிகமாகத்தான் இருக்கும் அதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன... சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 72.09 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது.. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி வரும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியிலும் 73.49 சதவிகித வாக்குகள்தான் பதிவானது... இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு அதிகமாக இருப்பது ஏன்?.., அது யாருக்குச் சாதகம்?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களில், 60 முதல் 70 சதவிகிதம் வரைதான் வாக்குப்பதிவு நடைபெறும்... அதேவேளை, இடைத்தேர்தல்களில், 70 - 85 சதவிகிதம் வரைக்கும்கூட வாக்குகள் பதிவாகும். ஒரு தொகுதி அல்லது குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேர்தல் நடக்கும்போது, கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மைக்ரோ லெவலில் பணியாற்றுவார்கள். குறிப்பாக சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடக்கும்போது, மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில்தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்... ஆனால், இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஒன்றியத்துக்கும்கூட, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
குஜராத்|10 காலிப் பணியிடங்களுக்கு குவிந்த இளைஞர்கள்.. தள்ளுமுள்ளில் உடைந்த தடுப்பு வேலி! #ViralVideo

அதிகமாகும் வாக்கு சதவீதம்... யாருக்கு சாதகம்?

உதாரணமாக, சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எடுத்துக்கொண்டால்கூட, திமுக சார்பில் 11 பேர்கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது... அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அர. சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், திமுக எம்.எல்.ஏ ஆர். லட்சுமணன் ஆகியோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.., விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில், விக்கிரவாண்டி, காணை, கோலியனூர் ஆகிய மூன்று ஒன்றியங்கள் வருகின்றன... இதில், ஒவ்வொரு ஒன்றியமும், மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது... அப்படிப் பிரிக்கப்பட்ட ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல்

உதாரணமாக, காணை ஒன்றியம் வடக்கு, தெற்கு, மத்தி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு,. அமைச்சர்கள், முறையே சக்கரபாணி, அன்பில்மகேஸ், கே.என்.நேரு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்... ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ மைக்ரோ லெவலில் வாக்களர்களை அணுகும்போது வாக்குப்பதிவு அதிகரிக்கிறது... வாக்களர்களை அணுகி தங்களின் திட்டங்கள், கருத்துக்களை முன்வைப்பதோடு, பணம், பரிசுப்பொருள்களின் விலைமதிப்பும் அதிகமாக இருக்கும்போது இயல்பாகவே வாக்குப்பதிவு அதிகமாகிறது.. அதற்கு பல்வேறு விதமான ஃபார்முலாக்களையும் அரசியல் கட்சிகள் பின்பற்றி வருகின்றன.. இப்படிப் பல்வேறு காரணங்களால் இடைத்தேர்தல்களில் அதிகமாக வாக்குப்பதிவாகிறது... வாக்கு சதவிகிதம் அதிகமாகும்போது அது யாருக்கு சாதகமாக இருக்கும்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
Euro Cup|16 வயதில் கோல்; பீலேவின் சாதனை முறியடிப்பு! உலகை திரும்பி பார்க்கவைத்த ஸ்பெயின் வீரர் யமால்

இடைத்தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும்கட்சி

பொதுத்தேர்தல்களுக்கும் இடைத்தேர்தல்களுக்கும் மிகப்பெரிய வெறுபாடு இருக்கிறது... பொதுத் தேர்தல்களில் வாக்குப்பதிவு நாளின்போது மக்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள், வாக்கு சதவிகிதமும் அதிகமாக வந்திருக்கிறது என்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து.., ஆனால், இதே கணிப்பு இடைத்தேர்தல்களுக்கு வொர்க் அவுட் ஆகாது என்பதுதான் எதார்த்தம்... உதாரணமாக இதுவரை நடந்த பெரும்பாலான இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு என்பது அதிகமாகத்தான் ஆகி வந்திருக்கிறது... அதேவேளை, பெரும்பாலும் ஆளும்கட்சியினர்தான் வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்pt web

கடந்த 25 ஆண்டுகளில் எடுத்துக்கொண்டால்கூட, நடந்த 53 இடைத்தேர்தல்களில், 38 தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது.., எதிர்க்கட்சிகள் 14 தேர்தல்களிலும் ஒருமுறை சுயேச்சையும் வெற்றி பெற்றிருக்கின்றனர்... அதிலும், 2019-ல் நடைபெற்ற 22 மாவட்ட இடைத்தேர்தலுக்கு (மினி சட்டமன்ற தேர்தல் என்று சொல்லப்பட்டது) முன்பாக நிலைமை இன்னும் வேறாக இருந்தது... காரணம், அதற்கு முன்பாக (2001-19) நடந்த 37 இடைத்தேர்தல்களில், 35 தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்றிருந்தது...

2004-ல் மங்களூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த திருமாவளவன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், அப்போது எதிர்க்கட்சியான திமுக சார்பில் போட்டியிட்ட கணேசன் வெற்றி பெற்றார்... தவிர, 2017-ம் ஆண்டில் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல், சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்... 2019-ல் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், எதிர்க்கட்சியான திமுக 13 இடங்களில் வெற்றிபெற பல்வேறு காரணிகள் அடிப்படையாக அமைந்தன...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
ஆந்திரா| குழந்தைகளைப் படிக்கவைக்க கிட்னியை விற்ற தந்தை.. மோசடிக் கும்பலிடம் ஏமாந்த கொடூரம்!

சிதறிய அதிமுக

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி வகித்தார்...சசிகலா சிறைக்குச் செல்ல கட்சிக்குள்ளும் பல்வேறு குழப்பங்கள் நடந்தன...டிடிவி தினகரன் தனியாக அமமுகவை ஆரம்பித்திருந்தார்... அவருக்கு அமோக ஆதரவும் இருந்தது... அவர் பிரித்த வாக்குகளால், ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் நான்கு தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பறிபோனது.,. திமுக தரப்பில் வலுவான கூட்டணியும் இருந்தது

சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ்
சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ்pt web

அந்தவகையில் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில், பெரும்பாலும் ஆளும்கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது... வாக்கு சதவிகிதம் அதிகமாக இருந்தாலும் அது ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக அமைந்திருக்கிறது என்பதே கடந்த கால வரலாறாக இருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
சாம்பியன்ஸ் டிராபி 2025|பாகிஸ்தான் செல்லமறுக்கும் இந்தியா! மாற்றுதிட்டம் என்ன? போட்டி எங்கேநடக்கும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com