தமிழகத்தில் கனமழை
தமிழகத்தில் கனமழைweb

மழைக்காலம்| பச்சை - மஞ்சள் - ஆரஞ்சு - சிவப்பு.. எந்த நிறம் எதைக்குறிக்கிறது??

இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, மக்களுக்குத் தயாராக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் நான்கு வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. எந்த நிறம் எதைக் குறிக்கிறது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
Published on
Summary

இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, மக்களுக்குத் தயாராக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் நான்கு வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. எந்த நிறம் எதைக் குறிக்கிறது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

மழை வருது... மக்களே இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க...

பச்சை - இந்த நிறம் வானிலை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது, வழக்கமான அன்றாட நடவடிக்கைகளைத் தொடரலாம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என்பதை குறிக்கிறது.

மஞ்சள் - வானிலை மோசமடைய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிறம் வழங்கப்படும். இந்த நிறம் வழங்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கனமழை
கனமழைமுகநூல்

ஆரஞ்சு - கடுமையான வானிலை உறுதியாகியுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்படும். இந்த நிறம் வழங்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், தகவல் தொடர்பு போன்ற பொதுச்சேவைகள் பாதிக்கப்பட அதிகவாய்ப்புள்ளது. மக்கள் தங்கள் அன்றாட திட்டங்களை மாற்றியமைத்துக்கொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

சிவப்பு - சிவப்பு நிறம் எச்சரிக்கை, மிகவும்அபாயகரமான வானிலையைகுறிக்கிறது. இந்த நிறம் வழங்கப்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். உள்ளூர்அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புஅமைப்புகள் உடனடியாகச் செயல்படவேண்டியிருக்கும். மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்பதை சிவப்பு நிறம் குறிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com