தமிழகத்தில் எவை இயங்கலாம் ? எவை இயங்காது - தளர்வுகள் சொல்வதென்ன?

தமிழகத்தில் எவை இயங்கலாம் ? எவை இயங்காது - தளர்வுகள் சொல்வதென்ன?

தமிழகத்தில் எவை இயங்கலாம் ? எவை இயங்காது - தளர்வுகள் சொல்வதென்ன?
Published on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னதாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் மே 17 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. அத்துடன் இந்த தளர்வுகள் மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையும் எனவும் தெரிவித்தது. இதனையடுத்து இன்று தமிழக முதல்வர்  பழனிசாமி தளர்வுகள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் பின்வருமாறு:

சென்னை மாநகராட்சியில் தொழிலாளர்கள் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி  முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9  மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள்  செயல்படுவதற்கு அனுமதி இல்லை.

நகர்ப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட  ஆட்சியர்கள் ஆய்வு செய்து 50% பணியாளர்களுடன் இயங்க
அனுமதியளிக்கலாம்.

ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
இயங்கலாம்

Containment Zone-ல் தளர்வு இல்லை

நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி  ஊரடங்கு தொடரும்



சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள  பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் SEZ, EOU, தொழில் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் 50  சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com