சிறையில் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு... முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்ன?

சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் குறித்து இங்கு காணலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிகோப்புப் படம்
Published on

நேற்று முன்தினம் (ஜூலை 17) மாலை காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதையொட்டி முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் என்னென்ன என்பது பற்றி இங்கே காணலாம்.

சிறையில் வழக்கமான உணவுடன் கூடுதலாக சப்பாத்தி வழங்கப்படும். வாரத்தில் மூன்று நாட்கள் கோழிக்கறி வழங்கப்படும். தினந்தோறும் அளிக்கப்படும் பால் மற்றும் தேநீரின் அளவு அதிகரிக்கப்படும். சிறையில் கைதிகள் அணியும் சீருடைக்கு பதிலாக சாதாரண உடைகளை அணிந்து கொள்ளலாம். தங்கும் அறையின் அளவு சற்று பெரிதாக இருக்கும். அதில் மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகள் இடம்பெறும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிகோப்பு படம்

சிறைக் கண்காணிப்பாளர் அனுமதியளித்தால் சிறையிலுள்ள பாத்திரங்களுக்கு பதிலாக வெளியிலிருந்து ஹாட் பாக்ஸ், தட்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறை வளாகத்தில் நடத்தப்படும் உணவகத்தில், சாதாரண கைதிகள் வாரந்தோறும் 750 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் வகுப்பு கைதிகள் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம்.

முதல் வகுப்பு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதி அளிக்கப்படும். அத்துடன், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள பிரத்யேக மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com