மெகா கூட்டணி - அதிமுகவுடன் யார் யார் சேர வாய்ப்பு?

பாஜகவுடன் விலகிய நிலையில், அதிமுக இனி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு பார்ப்போம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட (2021, ஜூலை) பிறகு, ஆளும் திமுகவுக்கு எதிராக அதிக விமர்சனங்களை வைத்துவந்தார் அவர். அதேநேரத்தில் அவ்வப்போது அதிமுக - பாஜக கூட்டணிக்கிடையே கருத்து மோதல்களும் வெடித்து வந்தன. இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி, பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துள்ளதாக அக்கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக கூட்டணி குறித்து அலசல்
"அ.தி.மு.க - வி.சி.க கூட்டணியா”? திருமாவளவனை நலம் விசாரித்த எடப்பாடி... பின்னணி என்ன?

குறிப்பாக, அதிமுக இனி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் அளித்த பிரத்யேக பேட்டியை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com