வெப்ப அலையால் மனிதர்களுக்கு மட்டும்தான் பாதிப்பா? ரயில் தண்டவாளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

வெப்ப அலை காரணமாக நாம் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் ரயில் தண்டவாளங்களும் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் அவற்றை கண்காணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ரயில் நிலையம்
ரயில் நிலையம்pt web

செய்தியாளர் - ராஜ்குமார்

அக்னி நட்சத்திர காலத்துக்கு முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. வெயிலின் தாக்கம் பல இடத்தில் இருக்கும் நிலையில் ரயில்வே தண்டவாளத்திலும் கடும் பாதிப்பு இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.

பொதுவாக 10 கிலோமீட்டருக்கு இடையில் தண்டவாளம் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதீத வெயில் தாக்கம் இருக்கும் நேரத்தில் இந்த இணைப்பு உள்ள இடத்தில் விரிசல் சுலபமாக ஏற்படும் என்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் நிகோஹன் ரயில் நிலையத்தில் வெப்ப அலை தாக்கம் காரணமாக ரயில் தண்டவாளம் பாதிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோன்று வெயில் காலத்தில் ரயில் தண்டவாளம் விரிவடைய வாய்ப்புள்ளதால் விபத்துகளுக்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தண்டவாள கண்காணிப்பு ஊழியர்களின் பணி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

ரயில் நிலையம்
பிரஜ்வலின் EX - டிரைவர் வெளியிட்ட வீடியோ.. சிக்கலில் பாஜக தலைவர்.. டிரைவர் கார்த்திக் கூறியது என்ன?

இதுகுறித்து DREU ரயில்வே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் கூறுகையில், “வெப்பத்தாக்கத்தால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கும். தண்டவாளத்தை கண்காணிக்கும் ஊழியர்களின் பணி முக்கியமானது. வெயிலில் தண்டவாளம் விரிவடையும் தண்டவாளம் விரிவடைவதை ஊழியர்கள் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

தண்டவாள இடைவெளி குறைந்தால் உடனே கண்காணிப்பார்கள். சாதாரணமாக தண்டவாளம் எத்தனை டிகிரி செல்சியஸ் இருக்கும் என்பதை கணக்கிட்டு வைத்திருப்பார்கள். உதாரணமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கலாம் என கணக்கிட்டார்கள் எனில், அதிலிருந்து 10 டிகிரி வரை அதிகரித்தால் தகுந்த பாதுகாப்புகளோடு வேலை செய்வார்கள்.

ஆனால், 20 டிகிரி வெப்பம் அதிகரித்தால் தண்டவாளத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது. தொழிற்சங்கத்தினர் ஹாட்வெதர் பேட்ரோலைப் பயன்படுத்தி கண்காணிப்பை மேற்கொள்வார்கள். அதீத வெயிலில் பணிகளை மேற்கொண்டால் தண்டவாளம் பாம்பு போல நெளியும். பீகாரில் அதீத வெயிலில் வேலைபார்த்தபோது தண்டவாளம் அடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். வெப்பகால ரோந்துப்பணியின்போது கெனபால் கருவி கொண்டு ஆய்வு செய்வர்.

தண்டவாள சத்தம் வித்தியாசமாக இருந்தால் தண்ணீரை ஊற்றி வெப்பம் தணிப்பர். தண்ணீர் கிடைக்காவிட்டால், சிவப்பு கொடி காட்டி ரயிலை ஊழியர் நிறுத்துவார்” என தெரிவித்துள்ளர்.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் அளவுக்கான ரயில்வே தண்டவாளம் தெற்கு ரயில்வே பராமரிப்பில் இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளையில், தண்டவாள கண்காணிப்பு ஊழியர்கள் பணி மிகவும் அவசியமாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com