ரயில் ஓட்டுநரின் பணிகள் என்ன?
ரயில் ஓட்டுநரின் பணிகள் என்ன?web

ரயில் ஓட்டுநரின் பணிகள் என்னென்ன? சிக்னல் எப்படி செயல்படுகிறது? எப்படி விபத்து நடக்கிறது? விவரம்!

கடலூரில் பள்ளி வேன் மீது, டிரெய்ன் மோதிய விபத்து தமிழகத்தையே அதிரச்செய்த நிலையில், ரயில் ஓட்டுநரின் பணிகள் என்ன? விபத்து எப்படி நடக்கிறது? என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்..
Published on

செய்தியாளர் - Vaijayanthi S

கடலூரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன்மீது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இது அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் அளித்திருக்கும் விளக்கத்தில், கேட் கீப்பர் கேட்டை மூடத்தொடங்கியபோது, பள்ளி வாகன ஓட்டுநர்தான் வேனைக் கடக்க அனுமதிக்குமாறு கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக விபத்து நடந்த இடத்தில் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்றோர் கேட் கீப்பர் தூங்கியதால்தான் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளில்லாத ரயில்வே கேட் என்பதால் தானியங்கி முறையில் கேட் மூடப்பட சிக்னல் கிடைத்ததா? என்பது குறித்தும் ரயில்வே விசாரணை நடத்தி வருவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு ரயில் எப்படி இயங்குகிறது?, அதன் ஓட்டுநர் எப்படி செயல்படுகிறார்? சிக்னல்கள் எப்படி கிடைக்கிறது?.. விபத்து எப்படி ஏற்படுகிறது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ரயில் ஓட்டுநரின் பணிகள்..

ரயில் ஓட்டுநர் லோகோ பைலட் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த லோகோ பைலட் ரயில்களை இயக்குதல் பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இதில் மிக முக்கியமாக ரயிலின் வேகம் மற்றும் பாதையை நிர்வகித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுடன் தொடர்பு கொள்வது ஆகியவை அவர்களின் வேலையாகும்..

அதுமட்டுமல்லாமல் ரயிலின் ஓட்டுநர் ரயில் மற்றும் அதன் இயந்திர செயல்பாட்டினையும் மிக கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு லோகோ பைலட்டுடன் உதவி லோகோ பைலட்ம் எப்போதுமே இருப்பார்.. இருவருமே கவனத்துடன் இயங்குவார்கள்.. அதனால் ஒரு ரயிலை இருவர் இயக்குகின்றனர். ஒவ்வொரு சிக்னலிலும், அதன் நிறம், அதன் எண், அந்த வழித்தடத்தில் வரும் எச்சரிக்கைகள் பற்றி இருவரும் பேசிக் கொண்டு கவனமாக பணியாற்றுவார்கள். இவை தவிர மற்ற சிக்னல்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறி பணியாற்றுவார்கள். இதன் காரணமாக, ஒருவர் தவறு செய்தாலும், மற்றவர் அதை சரிசெய்ய முடியும்..

ரயில் ஓட்டுநர்
ரயில் ஓட்டுநர்

அதனை மீறியும் கவனக்குறைவாக இருக்கும் போதுதான் விபத்துகள் ஏற்படுகின்றன..

ஒரு மனித தவறு ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கிறது. அதனால்தான் லோகோ பைலட்- உதவியாளர் உரையாடல்கள், சிக்னல் சரிபார்ப்பு, கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு, பாதைத் திட்டத்தைப் பின்பற்றுதல் அனைத்தும் கட்டாயமாகும். ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு கணமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

லோகோ பைலட்டின் முக்கிய பொறுப்புகள்

1. லோகோ பைலடின் பொறுப்பு

ஒரு ரயிலை ஓட்டும் ஓட்டுநர் ரயில்களை ஓட்டுவதற்கு, குறிப்பிட்ட கால அட்டவணைப்படியும் அறிவுறுத்தல்களின்படியும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

2. வேக கட்டுப்பாடு

விபத்துகளைத் தவிர்க்க அவர்கள் குறிப்பிட்ட வேக வரம்புகள் மற்றும் பாதை வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

3. பாதுகாப்பை உறுதி செய்தல்

ரயிலை இயக்கும் லோகோ பைலட் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அத்துடன் சிக்னல்கள் மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்களுக்கு உடனுக்கு உடனே பதிலளிக்க வேண்டும்..

ரயில் ஓட்டுநர்
ரயில் ஓட்டுநர்

4. கட்டுப்பாட்டு மையங்களுடன் தொடர்பு கொள்ளுதல்

ரயிலை ஓட்ட ஆரம்பித்தவுடனேயே லோகோ பைலட் என அழைக்கப்படும் ஓட்டுநர் கட்டுப்பாட்டு மையங்கள், சிக்னல் ஆபரேட்டர்கள் மற்றும் பிற ரயில் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.. அவர்கள் பயணம் முழுவதுமாக முடியும் வரை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்..

5. பழுதை சரி செய்தல்

லோகோ பைலட்டுகள் என்ஜின் மற்றும் அதில் உள்ள சிறிய பழுதுகளை சரிசெய்ய தெரிந்திருப்பார்கள்.

சிக்னலிங் அமைப்பு

ரயில் சிக்னல் என்பது, ரயில் ஓட்டுனர்களுக்கு பாதையின் நிலை மற்றும் அதன் இயக்கத்திற்கான வழிமுறைகளை தெரிவிக்கும் ஒரு அமைப்பாகும். இது ரயில்கள் ஒன்றோடு ஒன்றாக மோதாமல் இருக்கவும், பாதுகாப்பாக இயங்கவும் உதவுகிறது.

ரயில் சிக்னல் அமைப்புகள் பல வகையான சிக்னல்களைப் பயன்படுத்துகின்றன. அவை

சிக்னல் விளக்குகள், செமாஃபோர் சிக்னல்கள், தானியங்கி சிக்னல்களாகும்.

சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற விளக்குகளைப் பயன்படுத்தி, ரயில்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றனர். கைகளை அசைப்பதன் மூலம் அல்லது கைப்பிடியை உயர்த்துவதன் மூலம் சில முக்கியமான தகவல்களை தெரிவித்துக் கொள்கின்றனர்..

மேலும் தானியங்கி சிக்னல்கள் ரயில்களின் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான சிக்னலாகும். ஆதுமட்டுமல்லாமல் ரயில் பாதையின் நிலை, ரயிலின் வேகம் மற்றும் பிற இயக்க வழிமுறைகளைப் பற்றி ஓட்டுனர்களுக்கு தகவல்களை வழங்கும் ரயில் சிக்னலிங் அமைப்புகள், ரயில் பாதைகளில் ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்கின்றன.

பொதுவாகவே, ரயில் பாதைகளில் சிக்னல்கள் 1 முதல் 2 கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும். ஆனால் சில முக்கியமான பரபரப்பான இடங்களில் 500 முதல் 800 மீட்டர் வரை இருக்கும். ரயில்களின் வேகம் குறைவாக இருக்கும் நிலையங்கள் மற்றும் சந்திப்புகள் போன்ற இடங்களில் கட்டுப்பாடும் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். எனவே, அத்தகைய இடங்களில் சிக்னல்களுக்கு இடையிலான தூரம் 200 முதல் 500 மீட்டர் வரை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com