ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் என்ன?
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவுகளை பார்க்கலாம்.
1. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கத் தடையில்லை.
2. 3 வாரத்திற்குள் ஆலை இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆணை வெளியிட வேண்டும்.
3. ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும்.
4. ஆலையை சுற்றியுள்ள மக்களின் மேம்பாட்டுக்காக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
5.மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் விதிமுறைகள் மற்றும் தருண் அகர்வாலா குழு பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.
6. மாசு குறித்த விவரங்களை மாதம் ஒருமுறை இணையத்தில் வெளியிட வேண்டும்.
7. மாசு குறித்த விவரங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையத்துடன் பகிர வேண்டும்.
8. தரவுகளை தரவில்லை என்றால் பத்து லட்சம் ரூபாய் அபராதம்.
9. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் நிராகரிப்பு
10. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி