சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவித்தார்.
2018-19 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில், ரயில் திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு, எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும், 2019க்குள் 4,000 கிலோ மீட்டர், தொலைவு புதிய ரயில் பாதை அமைக்கப்படும், பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு ரூ.17,000 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் வந்தன.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை-பெங்களூருவை இணைக்கும் ராணுவ காரிடார் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.