சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

உத்தமர்கோவில் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சகோதரனுடன் ஸ்கூட்டரில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காசிக்கடை பகுதியைசு; சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ஸ்ரீவேதநாயகி (15). இவர் சமயபுரம் அருகே உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், அவர் தனது சகோதரர் கரனுடன் ஸ்கூட்டரில் உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த ஸ்ரீவேதநாயகியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com