'வெஸ்ட் நைல்' நோய் 'அலர்ட்' - தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!

கேரளாவில் வெஸ்ட் நைல் நோய் பரவல் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
வெஸ்ட் நைல்
வெஸ்ட் நைல்புதிய தலைமுறை

கேரளாவில் வெஸ்ட் நைல் நோய் பரவல் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

1937ஆம் ஆண்டு முதல்முறையாக ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் கண்டறியப்பட்டது இந்நோய். 2022 ஆம் ஆண்டு, 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள் கவனமுடன் இருக்க தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில், “ வெஸ்ட் நைல் - நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.இது, கொசுகள் மூலம் பரவுவதால் பொதுமக்கள் வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், வெஸ்ட் நைல் நோய்க்கு தடுப்பூசி இல்லை. ஆனால், முன்கூட்டியே கண்டறிந்தால் பாதிப்பிலிருந்து மீளலாம்.” என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் யாரும் அஞ்சவேண்டாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எங்கு முதலில் பரவியது?

கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல், 1937ஆம் ஆண்டு முதல்முறையாக ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் கண்டறியப்பட்டது. வெஸ்ட் நைல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் இதனால் முதல்முறையாக பாதிக்கப்பட்டார். இதன் காரணமாகவே இந்த காய்ச்சலுக்கு வெஸ்ட் நைல் என பெயர் வந்தது. 

உலக சுகாதார அமைப்பு

”பொதுவாக இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே, அதற்கான அறிகுறிகள் தென்படும். பாதிப்பு மோசமாக இருக்கும்பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும். இந்த காய்ச்சல் பாதிப்பு குதிரைகளுக்கும் ஏற்படும். ” என்று தெரிவித்துள்ளது.

வெஸ்ட் நைல்
"உங்கள் தட்டில் இந்த உணவெல்லாம் இருக்கிறதா" - 17 வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய ICMR! செம்ம டிப்ஸ்!

அறிகுறிகள்

அனைத்து வயதினருக்கும், ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சலால் பாதிப்பு ஏற்படும் என்றாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இதர நோயாளிகளுக்கும், இதனால் ஏற்படும் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொசுக்கள் கடித்து 2 முதல் 14 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com