இல.கணேசனின் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

இல.கணேசனின் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!
இல.கணேசனின் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபலனின் சதாபிஷேக விழாவில் செண்டை மேளம் வாசித்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

மணிப்பூர் மாநில ஆளுநரும் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபலனின் - சந்திரா ஆகியோரின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன், தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,  நடிகர் ரஜினிகாந்த், விஜிபி சந்தோசம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். விழாவுக்கு வந்த மம்தா மண்டபத்தின் வாசலில் இருந்த செண்டை மேளம் வாசித்து உற்சாகமாக விழாவில் பங்கேற்றார். விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மம்தா பேனர்ஜுடன் இணைந்து பங்கேற்றனர்.

நேற்று ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி இருவரும் சந்திப்பு பேசிய நிலையில், விழாவிலும் இருவரும் ஒரு சேர பங்கேற்று இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: `ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பின் உத்தரவு’ - சென்னை உயர்நீதிமன்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com