\
கட்சி சார்பற்ற போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு

கட்சி சார்பற்ற போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு

கட்சி சார்பற்ற போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு
Published on

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கட்சி சார்பற்ற முறையில் மக்கள் போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெடுவாசலில் புதிய தலைமுறையிடம் தன் கருத்துக்களை தெரிவித்த திருமாவளவன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கட்சி சார்பற்ற முறையில் மக்கள் போராடுவதை வரவேற்பதாகவும், அரசியல் கட்சிகளும் இதில் தலையிட்டு போராடுவது மத்திய அரசிற்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூறினார்.

பாரதிய ஜனதா தவிர்த்து இந்த திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பதாக தெரிவித்த திருமாவளவன், மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் வரை மக்கள் போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com