13 வகையான பழங்கள்... 750 கிலோ கேக்... கோலாகலமாக நடந்த கேக் மிக்ஸிங் திருவிழா

13 வகையான பழங்கள்... 750 கிலோ கேக்... கோலாகலமாக நடந்த கேக் மிக்ஸிங் திருவிழா

13 வகையான பழங்கள்... 750 கிலோ கேக்... கோலாகலமாக நடந்த கேக் மிக்ஸிங் திருவிழா
Published on

பொள்ளாச்சி தனியார் உணவகத்தில் 13 வகையான உலர் பழங்களைக் கொண்டு 750 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக 15 முதல் 20 நாட்களுக்கு முன்னதாகவே உலர் பழங்கள் மற்றும் பழச்சாறு கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவளம்பட்டியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் அத்திப்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, பேரிச்சை உள்ளிட்ட 13 வகையான உலர் பழங்கள் மற்றும் உயர்ரக பழச்சாறு கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

கிறிஸ்மஸ் கேக் தயாரிப்பதற்கு வாடிக்கையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் உலர் பழத்தின் மீது பழச்சாரை ஊற்றி அனைவரும் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கிறிஸ்மஸ் பாடல் பாடி உலர் பழங்களை கலவை செய்தனர். இந்த கலவையை 15 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 750 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com