தமிழ்நாடு
பருமன் சிகிச்சையில் பெண் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர்களிடம் நாளை விசாரணை
பருமன் சிகிச்சையில் பெண் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர்களிடம் நாளை விசாரணை
சென்னையில் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர்களிடம் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் உடல் பருமனை குறைப்பதற்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்ற வளர்மதி என்ற பெண், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயிரிழந்த வளர்மதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையானதா என்று விசாரிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை ஒருவாரத்தில் தாக்கல் செய்யப்படும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.