தமிழ்நாடு
களைகட்டிய ஆயுத பூஜை விழா: உற்சாகமாக கொண்டாடி மகிழும் தமிழக மக்கள்
களைகட்டிய ஆயுத பூஜை விழா: உற்சாகமாக கொண்டாடி மகிழும் தமிழக மக்கள்
தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை, பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
வீடுகள், கடைகள், அலுவலகங்களில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, கடவுளுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை படைத்து, உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் தொழில்வளம் பெருக, தொழில் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி வழிபடுகின்றனர்.
அதேபோல மாணவ, மாணவிகள் கல்வி சிறக்க வேண்டி, நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபடுகின்றனர். ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.