105 தம்பதியினருக்கு அறுபதாம் திருமணம்.. கள்ளக்குறிச்சியில் நடந்த பிரமாண்ட மணவிழா..!
கள்ளக்குறிச்சியில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில், 105 தம்பதியினருக்கு ஒரு மண்டபத்தில் அறுபதாம் கல்யாணம் செய்து வைக்கும் திருமண விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த 10 ஆண்டுகளாக வாசவி மற்றும் வனிதா எனும் பெயரில் சங்கம் ஒன்று நடத்தி வரப்படுகிறது. இந்த சங்கத்தின் மூலமாக திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன் பெரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல நுரையீரல் மற்றும் காது மூக்கு என தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே சங்கத்தின் மூலமாக நேற்று 105 தம்பதியினருக்கு 60-வது, 70-வது மற்றும் 80-வது திருமணம் இலவசமாக நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவில் ஒவ்வொரு தம்பதியினரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில்கு சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் கோட்டாச்சியர் கலந்துகொண்டார்.
ஒரே திருமண மண்டபத்தில் 105 ஜோடி தம்பதியினருக்கு நடத்தப்பட்ட இந்த திருமணம் அவர்களது குடும்பத்தினரிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.