\
மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகைபுதிய தலைமுறை

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பத்தின் நிலையை அறியவேண்டுமா? இதை செய்ங்க...!

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
Published on

கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. மாதம்தோறும் தகுதியுள்ள மகளிருக்கு 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற இத்திட்டத்தில், சில விண்ணப்பங்கள் மட்டும் குளறுபடிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலையை அறிய தமிழக அரசு இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது.

அதன்படி www.kmut.tn.gov.in என்ற இணையத்தில் குடும்ப அட்டை விவரங்களை கொடுத்து விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தை அறியலாம். தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பலரும் உள்நுழைந்ததால், இணைய சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com