சென்னையில் அடுத்த வாரம் மழை? - வெதர்மேன் பிரதீப் ஜான்

சென்னையில் அடுத்த வாரம் மழை? - வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னையில் அடுத்த வாரம் மழை? - வெதர்மேன் பிரதீப் ஜான்

சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த வாரம் மழையை எதிர்ப்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தென்மேற்கு பருவமழையால் பயன் உள்ளது. கடந்த 3 நாட்களாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது. அடுத்தவாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே மேற்கு தொடர்ச்சி பகுதியில் அடுத்த வாரம் கனமழை பெய்யலாம்.

ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை மக்கள் பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது. ஜூன் மாதத்தில் மொத்த மழை அளவே 52 மில்லி மீட்டராகத்தான் இருக்கும். காலையில் நல்ல வெயில் அடிக்கும். இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை இருக்கும். ஜூன், ஜூலை மாத மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயராது. ஜூன் மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் கத்திரியைப் போலவே இருக்கும். இந்த மழை கண்டிப்பாக தண்ணீர் பிரச்னையை தீர்க்காது. இந்த மழை விட்டுவிட்டு தான் பெய்யும். ஒரு நாளை மழை பொழிந்தால் 5 நாள் வெயில் அடிக்கும். ஆனால் மழை வரப்போவதை நம்மால் உணர முடியும். அதனால் மழை நீரை சேகரிக்க நாம் தயாராக இருந்தால் அதை பயன்படுத்த முடியும். 

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். தரைக்காற்று வீசப்படுவதால் இரவு நேரங்களில் கூட அதிகமான வெப்பம் காணப்படும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com