தமிழ்நாடு
10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு; நீலகிரியில் கனமழை: - வானிலை அறிக்கை
10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு; நீலகிரியில் கனமழை: - வானிலை அறிக்கை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.